×

காங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

காங்கயம், மார்ச் 20: காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கொரோனா நோய் பரவும் விதம், அதன் அறிகுறிகள், வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?, கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் விமல்ராஜ்  பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
    இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாட்சியர் புனிதவதி, காங்கயம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், சாவடிப்பாளையம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் முரளி, காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவன்மலை: சிவன்மலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் மலைக் கோவிலில்  கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. மேலும், கோவில் நிர்வாகம்  சார்பில், கோவிலில் கை கழுவும் இடம் அருகே, சோப்பு மற்றும் கிருமி நாசினி மருந்துகள் வைக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சோப்பு போட்டு கை  கழுவிய பின்னரே கோவிலுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Coronavirus Awareness Camp ,Congo ,
× RELATED உலகம் முழுவதும் போர் நாளுக்கு நாள் ஆபத்து : ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை