×

கொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை

கோவை, மார்ச் 20:  கொரோனா வைரஸ் தொற்று நோய் முன் எச்சரிக்கை காரணமாக மார்ச் 31ம் தேதி வரை பல தொழில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக ஜி.எஸ்.டி வரி, ஜி.எஸ்.டி அபராதம் வரி உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என  இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் திருப்தி அளிக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. குறிப்பாக சிறு,குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஆர்டர்களுக்கான பணம் பெறமுடியாமலும், மார்ச் 31ம் தேதி வரை தொழில்கள் மூடப்பட்டதால் பொருட்களை கொடுக்க முடியாத சூழ்நிலையிலும் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் பொருட்டு ஜி.எஸ்.டி வரி, ஜி.எஸ்.டி அபராத கட்டணம் உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு வேண்டும். அதே போல் வங்கி கடன்களை திரும்ப செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chamber of Commerce ,Corona ,
× RELATED தமிழகம் முழுவதும் கடைகள் இயங்கும்...