×

நீதிமன்றங்களுக்கு விடுமுறை: அரசுக்கு கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருவாரூர் மாவட்ட நுகர்வேர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது: தமிழகம் முழுவதும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு கீழ் மாவட்ட நீதிமன்றங்கள் உரிமையியல் நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கையாக தியேட்டர்கள் மால்கள், பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றமும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக நீதிமன்றங்களில் வழக்காடிகளின் கூட்டம் சேரக்கூடாது என்றும் அதன் மூலம் வைரஸ் பரவக்கூடுமென்றும் தடுப்பு நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கீழமை நீதிமன்றங்களில் முன்சிப் கோர்ட் குற்றவியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் ஆகியவற்றில்தான் அசல் வழக்குகள் நடத்த வழக்காடிகளும் கூட்டமாக வருகின்றனர். பலவிதமான மக்கள் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதுவும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆதலால் தமிழக அரசு உடனே செயல்பட்டு மாவட்ட நீதிமன்றங்கள் சார்பு நீதிமன்றங்கள் முன்சிப் நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : courts ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...