×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்

மன்னார்குடி, மார்ச் 19: கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுசுகாதாரம் மற்றும் மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் தொற்றுநோய் பரவுதல் கட்டுப்படுத்தும் பணி, கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மன்னார்குடி வர்த்தக சங்கம், திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல் பணிகளுக்கான சிறப்பு அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான சரவணன் தலைமை வகித்தார். தாசில்தார் கார்த்திக், நகராட்சி ஆணையர் (பொ) திரு மலைவாசன், மருத்துவ அலுவலர் டாக்டர் அபூர்வ தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதி ஜீவா, செயலாளர் ஆனந்த், அமைப்பு செயலாளர் எஸ்எம்டி கருணாநிதி, ஹோட்டல் சங்கம் சார்பில் சதிஷ், தங்கும் விடுதி சார்பில் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வளாகத்தின் முன்புறம் வருகை தரும் நபர்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவி சுத்தம் செய்திட ஏதுவாக கைகழுவும் இடம் தோற்று நீக்கு மையம் அமைத்து அதில் தோற்று நீக்கி சானிடைசர் வைத்தும் தண்ணீர் வசதியுடன் அதனை பராமரிக்க வேண்டும், தரை பகுதிகள் ஹைபோ குளோரைடு பிளீச்சிங் பவுடர் கலந்த நீர் கொண்டு தினசரி இரண்டு முறை கழுவ வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் இருக்கைகள், மேஜைகள், படிக்கட்டுகள், கைப் பிடிகள் மற்றும் பொது மக்கள் கை வைக்கக்கூடிய இடங்களில் லைசால் கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும், 50 நபர்களுக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும். கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், தொற்றுநோய் கண்ட நபர்களை பணியில் அமர்த்த கூடாது. உரிய சிகிச்சைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பான் உள்ளிட்ட அம்சங்களை கண்டிப்பாக நடைமுறை படுத்தி ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்த பட்டது. அதனை ஏற்று கொள்வதாக அனைத்து தரப்பு வணிகர்களும் அறிவித்தனர்.

Tags : Corona Prevention Awareness Meeting ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்