×

ரூ.95 லட்சத்தில் புதிய பாலம் 20 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கூழையாற்றில் ரூ.95 லட்சத்தில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குடும்பல், குன்னூர், கீரக்களூர், திருவலஞ்சுழி, பூசலாங்குடி, ஆண்டாங்கரை, கோமல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மணலி வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி திருத்துறைப்பூண்டி - திருவாரூர் பகுதிக்கு போகலாம். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் ஊராட்சி தேளாச்சேரி வழியாக 2 கி.மீட்டர் தூரத்தில் திருத்துறைப்பூண்டிக்கு குறுக்கு வழியாக வரலாம். வருவதற்கு திருத்துறைப்பூண்டி அருகே உள்ளவரம்பியம் ஊராட்சி கூழையாற்றில் பாலம் அமைத்தால் வரலாம். எனவே இந்த இடத்தில் பாலம் அமைக்க சுமார் 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செங்குட்டுவன் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் வரம்பியம் கூழையாற்றில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய பாலம் கட்ட ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இதனையடுத்து அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் பணியை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் ரமேஷ் கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி, ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், துணை தலைவர் சாந்தி கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் குமரரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 20 ஆண்டுக்குகளுக்க மேலாக வைத்த கோரிக்கை நிறைவேறியதற்கு பொதுமக்கள் அரசு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags : bridge ,
× RELATED பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்