×

திருப்பைஞ்சீலியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

மண்ணச்சநல்லூர், மார்ச் 19: மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அறியப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருப்பைஞ்சீலி ஊராட்சியில் திருப்பைஞ்சீலி கோயில் பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். பேரணியில் மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும் கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும். முககவசத்தை எவ்வாறு அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்க மருத்துவ அலுவலர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.திருப்பைஞ்சீலி கோயில் அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ஊராட்சியின் அனைத்து வீதிகளின் வழியாக சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச்சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம், கைக்குட்டைகள் வழங்கப்பட்டது. பேரணியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஐஸ்வர்யா, ஆறுமுகம், ஊராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,awareness rally ,Thiruppingeli ,
× RELATED கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து...