×

கொரோனாவை தடுக்கும் சித்த மருத்துவம்

திருச்சி, மார்ச் 19: கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவத்தில் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்த தகவலை திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடெங்கும் கொரோனாவின் கோரதாண்டவம் சீனாவின் ஊகான் மகாணத்தில் டிசம்பர் 2019 ல் நடந்தேறியது. அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகள் மற்றும் உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் எட்டியுள்ளது. இந்த வைரஸ் 2002-03ம் ஆண்டுகளில் சார்ஸ் என்ற வைரஸை சார்ந்தது தான். இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வறட்சி, கரகரப்பான குரல் உடல் சோர்வு, இருமல், மூச்சு விடுதலில் கடும் சிரமம் போன்றவை ஏற்படும். இதனைக்கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம். பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும். சீனர்கள் 2002-2003ம் ஆண்டுகளில் இதே போன்று சார்ஸ் என்ற வைரஸ் பரவிய காலங்களில் அதிமதுரம் என்ற அற்புத மூலிகையை பயன்படுத்தி நோய்க்குறி குணங்களை சரிப்படுத்திக்கொண்டனர். அப்போதும் சுவாசப் பாதை கோளாறுதான் ஏற்பட்டது. அதிமதுரத்தில் உள்ள வேதிப் பொருள் இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.

சித்த மருத்துவ டாக்டர் ரத்தினம் தெரிவித்தாவது, இந்நோயிலிருந்து நம்மைக் காக்க பயன்படும் ஒரு குடிநீர் ஆடாதொடை, அதிமதுரம், அரிசித்திப்பிலி, தாளிசபத்திரி இவை அனைத்தும் சம அளவு சேர்த்து குடிநீராக்கி காலை, மாலை அருந்தவும். (அதிமதுரம், அரிசித்திப்பிலி, தாளிசபத்திரி) இவை யாவும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.வருமுன் காப்போம் நோய் எதிர்ப்பு கக்தியை உருவாக்குவோம். இதற்காக தினம் ஒரு நெல்லிக்கனி உண்டு வரலாம். நெல்லிக்காய் லேகியம் அனைத்து சித்த மருந்தகங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வாங்கி சாப்பிட்டு பயன்பெறவும்.மிளகு, வைரஸ் கிருமி எதிர்ப்பதில் அற்புதமான மருந்து. சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணத்தை ஒரு டீஸ்பூன் தேனில் இருவேளை எடுத்துக் கொள்ளலாம். இந்த சூரணம் 5 கிராம் எடுத்து அதனுடன் சிறிதளவு துளசி சேர்த்து குடிநீர் செய்து குடித்துவர இருமல் தொண்டைக்கட்டு மூச்சு விடுவதில் சிரமம் தீரும்.

அதிமதுர சூரணம்.அதிமதுரம் 5 கிராம், மிளகு 5 கிராம், கடுக்காய் 5 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்து பவுடராக்கி கிராம் வீதம் இருவேளை தேனில் சாப்பிட்டு வர சுவாசப்பாதை கோளாறுகளை சரி செய்யும்.நமது முன்னோர்கள் வெளியில் சென்று வீட்டிற்குள் வரும் முன் கை, கால்களை கழுவி விட்டு வரச்சொல்வார்கள். அதன் காரணம் நோய் கிருமிகள் வராதவாறு பார்த்துக்கொள்வதே. கைகுலுக்குவது நமது பாரம்பரியமல்ல. கைகூப்பி வணங்குவதே நமது பாரம்பரியம். நமது பாரம்பரிய முறைகளை பின்பற்றி சுத்தத்தை நம் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுத்து எந்த விதமான நோய்களையும் நம்மிடம் வராதவாறு பார்த்துக்கொள்வோம் என்றார். அச்சமடைய தேவையில்லை கவனம் தேவை, சுத்தம் முக்கியம். (அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்). தொடர்ந்து மாநகர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து மருந்தகங்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tags :
× RELATED கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டும் ஓயாத...