×

திருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை

பாபநாசம், மார்ச் 19: திபாபநாசம் அடுத்த திருவையாத்துக்குடி ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தேவராயன்பேட்டை செல்லும் சாலை, கோயிலாம் பூண்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தார்சாலைகள் படுமோசம் என்றால் சிமென்ட் சாலைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED குண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்