வாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கும்பகோணம், மார்ச் 19: கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் கஞ்சா விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். அதன்பேரில் கும்பகோணம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது கஞ்சா விற்ற கும்பகோணம் வளையப்பேட்டை யானையடி பகுதியை சேர்ந்த செந்தில் என்ற கசாய செந்தில் (45), இவரது மனைவி மாரியம்மாள் (35), இவர்களது கூட்டாளிகள் பட்டீஸ்வரம் தனசேகர் (30), தாராசுரம் எலுமிச்சாங்காபாளையம் தனபால் மகன் அருண்குமார் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 27 கிலோ கஞ்சா, 550 கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>