×

அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் 31ம் தேதி வரை ரத்து

பெரம்பலூர்,மார்ச்.19: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான அனைத்து நிகழ்ச் சிகளும் வரும் 31ம்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவி த்திருப்பதாவது : தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31ம்தேதிவரை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே கை கழுவுதல் உள்ளிட்ட பல் வேறு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களில் அடிக்கடி கிருமிநா சினிகள் தெளிக்கப்பட்டு, தூய்மைப்பணிகள் மேற் கொ ள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்ற மாநில ங்களுக்கு பயணிப்பதை யும், பொது இடங்களில் அ திக அளவில் மக்கள் கூடு வதையும் அடுத்த 15 நாட்க ளுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாதாந்திர வே ளாண் குறைதீர்க்கும் கூட் டம், ஓய்வூதியதாரர்கள் கு றைதீர்க்கும் கூட்டம் போன் ற குறைதீர்க்கும் கூட்டங் கள் மற்றும் இன்று (19ம் தேதி) நடைபெற இருந்த அரசுப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 21ம்தேதி சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம், உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் 31ம்தேதிவரை தற்காலிக மாக ரத்து செய்யப்படுகி றது. எனவே பொதுமக்கள் அனைவரும் சமூக நலனில் அக்கறை கொண்டு மக்கள் அனைவரும் கூடும் கோயில் திருவிழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள் ஆகியவற்றி ற்கு செல்வதை தவிர்த்து அரசின் கொரோனா வைர ஸ் நோய் தடுப்பு நடவடிக் கைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்கிட வேண் டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : collector ,Ariyalur ,district ,Perambalur ,shows ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...