×

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

பொன்னமராவதி ,மார்ச்19: பொன்னமராவதியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொன்னமராவதி அருகே கொன்னையூரில் குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொன்னமராவதி குழந்தைகள் நல களப்பணியாளர் பூங்கொடி மற்றும் திருமயம் ஒன்றிய குழந்தைகள் நல களப்பணியாளர் ராஜலட்சுமி ஆகியோர் குழந்தைகளுக்கான திருமண தடைச்சட்டம் 2006 ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போஸ்கோ 2012, எவையெல்லாம் பாலியல் குற்றங்கள் என்பன பற்றிய தகவல், போஸ்கோ சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்,பாலியல் சம்பந்தப்பட்ட புகார்களை யாரிடம் கூறுவது மற்றும் அதற்கான இலவச தொலைபேசி எண் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும், வளர் இளம் பெண்களிடமும், பெற்றோர்களிடமும் களப்பணியாளர்கள் வழங்கினர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் மின்விநியோகத்தை...