×

பொன்னமராவதி அருகே 100 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்

பொன்னமராவதி,மார்ச்19: பொன்னமராவதி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 2மணிநேரம் போராடி அணைத்தனர். பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியைச்சேர்ந்தவர் குமார் என்ற வேலு இவரது வீட்டின் அருகே வைக்கோல்போர் இருந்துள்ளது. இதில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தீயை அணைத்தனர்.சுமார் 2மணிநேரம் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர்.இந்த தீவிபத்தால் சுமார் 100கட்டு வைக்கோல் எரிந்து சேதமடைந்துள்ளது.

Tags : Ponnamaravathi ,
× RELATED சரக்கு வாகனத்தில் தீ