×

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

திருக்கோவிலூர், மார்ச் 19: திருக்கோவிலூர் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், சூப்பர் மார்க்கெட்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மற்றும் அதிகாரிகள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கோவில், ஓட்டல் ஆகிய பகுதிகளுக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் உள்ளே நுழையும் இடத்தில் கிருமி நாசினியை தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது சுத்தம் செய்ய வணிக நிறுவனங்களின் உரிமையாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதற்கு முன்னதாக பேருந்து நிலையத்தில் பெங்களூரில் இருந்து வரும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை ஆய்வு செய்தார். மேலும்  மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த ஆய்வில் கோட்டாட்சியர் சாய்வர்தினி, டிஎஸ்பி மகேஷ், தாசில்தார் சிவசங்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், பிடிஓ ரேச்சல் கலைச்செல்வி, சிஎம்ஓ அலமேலு, மருத்துவர் ராஜவிநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Inspection ,Kallakurichi Collector ,Tirukovilur Bus Station ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...