×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன

நாகர்கோவில், மார்ச் 19: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் அனுப்பி வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தக்கலை கல்வி மாவட்டத்தில் 6753 பேரும், குழித்துறையில் 4102 பேரும், நாகர்கோவிலில் 7647 பேரும், திருவட்டாரில் 5155 பேரும் என்று மொத்தம் 23 ஆயிரத்து 657 பேர் எழுதுகின்றனர். இந்தநிலையில் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் நேற்று குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. அவை முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் அதிகாரிகளால் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு நேற்று நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அந்தந்த அலுவலகங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari 10th ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு