×

உடன்குடி செம்புலிங்கபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

உடன்குடி, மார்ச் 19: உடன்குடி ஒன்றியம், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி செம்புலிங்கபுரத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.5.20லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்குரிய பணிகள் நடந்தது. இதற்காக தாங்கைகுளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யும் பணி தொடங்கியது. வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி பாலசரஸ்வதி தலைமை வகித்து குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக துணைத்தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் சிவராதா, ஜகோர்ட்துரை, ரிங்ஷா ஜீவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்த்தலைவர் தேவராஜன், அதிமுக கிளைச் செயலாளர்கள் சேர்மத்துரை, ஆறுமுகபாண்டி, ஒன்றிய அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை  செயலாளர் சொர்ணசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி