×

கொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையில் பிராய்லர் கோழி விற்பனையில் கடும் வீழ்ச்சி

நெல்லை, மார்ச் 19: தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பிரச்னை எதிரொலியாக பிராய்லர் கோழி விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நெல்லை  மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாக  அதிகாரிகள் தெரிவித்து வந்தாலும் கூட அதன் பாதிப்புகளை பொதுமக்களால் உணர  முடியும் நிலை உள்ளது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த  சந்தேகத்தில் உள்ள இருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருகைதந்த சுமார் 107 பேர்  வீட்டு கண்காணிப்பில் இருந்துவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள்,  வதந்திகள் பொதுமக்களை அதிகம் வதைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ்  பாதிப்பு பாதிப்பு வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக  வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் பரிவர்த்தனையில் இதன் பாதிப்பை நன்கு  அறியமுடிகிறது.  இந்தகொரோனா வைரஸ் பிரச்னை  எதிரொலியாக நெல்லையில் பிராய்லர் கோழிகள் வர்த்தகம் கடுமையான  வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக பெரிய பெரிய பிராய்லர்கள்  மட்டுமே தற்போது இயங்கும் நிலையில் உள்ளன. முக்கிய பகுதிகளில் இயங்கிய பல  சிறிய பிராய்லர்கள் மூடப்பட்டுள்ளன. தெருவிற்கு 4 அல்லது 5 என இயங்கிய  பிராய்லர்கள் தற்போது 5 தெருக்களுக்கு ஒன்று என்ற நிலையில் தான்  திறந்துள்ளன.

மேலும் பெரிய பிராய்லர்களில் இருந்து புரோட்டாக்கடைகள்,  நைட்கிளப்கள், அசைவ ஓட்டல்களுக்கு என தினமும் குறைந்த பட்சம் ஒரு  பிராய்லரில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோக்கள் எடையிலான கோழிக்கறிகள்  விற்பனையாகி வந்த நிலையில் தற்போது வெறும் சில நூறு கிலோ கோழிக்கறிகளே  விற்பனையாகிவருகின்றன. நாமக்கல் பகுதிகளில் இருந்து லாரிகளில் தினமும்  வரும் கோழிகள் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறைதான் டெலிவரி செய்யப்படுகிறது.  இதனால் நெல்லையில் கோழி உறிக்காமல் கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும்,  உறிக்கப்பட்ட கறிக்கோழி கிலோ 55 முதல் 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த வாரம்  இதே கோழிகள் இருமடங்கு விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான  ஓட்டல்கள், புரோட்டா கடைகளில் சிக்கன் விற்பனை சரிந்துள்ளது. இது  மட்டுமல்லாமல் அசைவபிரியர்கள் மத்தியிலும் கொரோனா வைரஸ் பீதி  தொற்றிக்கொண்டுள்ளதால் பெரும்பாலான கடைகளில் அசைவ உணவுகளின் விற்பனை  சரிந்து வருகிறது. கோழிகள் மட்டுமல்லாமல் காடை, கவுதாரி, புறா  உள்ளிட்டவற்றின் கறிகளும் தற்போது பிராய்லர்களில் கடுமையாக குறைந்துள்ளன.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ