×

ஆதம்பாக்கம் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் திமுக சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. திமுக தலைவர்  முக.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின்  வேண்டுகோளுக்கு இணங்க ஆலந்தூர் 165வது  வட்ட திமுக சார்பாக  பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும்  கிருமி நாசினிகள்,  முககவசம்  இலவசமாக  வழங்கும் நிகழ்ச்சி  ஆதம்பாக்கம்  நியூ காலனியில் நடந்தது.  
இதில்,  வட்ட செயலாளர்  கே.ஆர். ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

மேலும், பள்ளி மாணவர்களை கொண்டு கைகளை கழுவுவதின் அவசியம் குறித்து வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் கே.ஆர். ஆனந்தன் மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன் கோ.ராஜவேல், ஜி.ரமேஷ், பகுதி பிரதிநிதி சுப்புராஜ், இளைஞரணி மணிகண்டன், குணசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : public ,DMK ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...