வாலிபர் தற்கொலை

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம், விநாயகர் நகரை சேர்ந்தவர் அரிகரன் (21). பி.காம் பட்டதாரி. இவர் அடிக்கடி மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான மருத்துவ சிகிச்சைகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். எனினும், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது நிற்கவில்லை. இதனால் அரிகரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு வீட்டின்அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு அரிகரன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரிகரனின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>