×

போதை ஏறி போச்சு தெருக்களில் குடிமகன்கள் ‘மட்டை’

ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான டாஸ்மாக் இயங்குகிறது. இங்கே குடிக்க வரும் குடிமகன்கள் போதையில் ரோட்டில் விழுந்து கிடக்கின்றனர். சிலர் போதையில் கழிவுநீர் வாய்க்காலில் மட்டையாகி கிடக்கின்றனர். பொதுமக்கள் அவர்களை மேலே தூக்கிப்போட்டு காப்பாற்ற வேண்டியுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், ராஜபாளையம் பகுதியில் மட்டும் அதிக அளவு டாஸ்மாக் கடைகள் செயல் படுகிறது. பல குடியிருப்புப் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் செயல்படுகிறது. பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. ராஜபாளையம் வழியாக செல்லக்கூடிய வெளியூர் பயணிகள் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அசுத்தமற்ற இடங்களில் போதையில் விழுந்து கிடக்கின்றனர். இவர்களால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பல நேரங்களில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Citizens ,streets ,Bodo ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...