×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி, மார்ச் 19:  குடியுரிமை சட்டத்திருத்ததை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 2500க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியுரிமை சட்டத்திருத்தை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி, நேற்று காலை  திருவள்ளூர் மேற்கு, கிழக்கு மாவட்ட தவ்ஹீத்  ஜமாத் சார்பில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அஜாஸ் அகமது தலைமை தாங்கினார். இதில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாநிலச் செயலாளர் தாவுத் கைசர் கண்டன உரையாற்றினார். தமிழக அரசு,   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக போலீசார் போராட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யவில்லை. இதனையடுத்து, அவர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில்  ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முகமது இப்ராஹிம், சாகுல், மாலிக், நிஜாமுதீன், சாகிர் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்ட முடிவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்கள் தொகை பதிவேட்டை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags : Tawheed Jamaat ,demonstration ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்