×

ரவுடிகள் கண்காணிப்பு போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் ₹8 லட்சம் பறித்த 2 பேர் கைது

சென்னை,மார்ச் 19: ரவுடிகள் கண்காணிப்பு போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் பணத்தை பறித்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் யுவராஜ்  புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் ஆக்டிங் டிரைவராக திருவேற்காட்டை சேர்ந்த கார்த்திக் (எ) சிவா(38) என்பவர் சுயமாக கட்டுமான தொழில் செய்ய விரும்புவதாக கூறி உதவி கேட்டார். அதன்படி நான் ரூ.8 லட்சம் பணம் கொடுத்தேன். பின்னர் பணத்தை திரும்ப கேட்ட போது, அவரது நண்பர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து, நான் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸ் என்றும், கார்த்திக்கிடம் பணம் இனி கேட்கக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றனர்.

எனவே இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி புகார் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் பணத்தை பெற்று கொண்டு ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸ் என்று கூறி மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து திருவேற்காடு, ராஜகுப்பத்தை சேர்ந்த கார்த்திக்(எ) சிவா(38), அவரது நண்பர் ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையை சேர்ந்த ஜெய்சங்கர்(எ)விஜய்குமார்(46) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்