×

சிறுபுழல்பேட்டை பகுதியில் உடைந்து விழும் ஆபத்தில் மின்கம்பம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 19: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இவை பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நாட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை - சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களின் உச்சிப் பகுதி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது. பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல முறை மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. அத்தோடு அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள்  செல்கிறது. இவை அவ்வப்போது ஒன்றோடொன்று உரசுகிறது. இதனால் கம்பிகள் தேய்ந்து எப்போது வேண்டும் என்றாலும் அறுந்து விழும் சூழலில் உள்ளது.  இந்த மின்கம்பம் உள்ள சாலையானது ஜி.ஆர்.கண்டிகை, பூவலம்பேடு, கண்ணன்கோட்டை, கெட்டனமல்லி ஆகிய இடங்களில் இருந்து தொழிலாளர்கள் தொழிற்பேட்டைக்கு இந்த வழியே தான் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.  அவர்கள் இதனை அச்சத்துடன் கடந்து வருகின்றனர். எனவே இதனை மாற்ற மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : bulb area ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...