×

பிளஸ்2 இயற்பியல் தேர்வு; 304 பேர் ஆப்சென்ட்

கோவை, மார்ச் 19:  கோவை மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதில், இயற்பியல் தேர்வினை 14,659 பேர் எழுதினர். 304 பேர் எழுதவில்லை. பொருளாதார தேர்வினை 17,731 பேர் எழுதினர். 432 பேர் எழுதவில்லை. மேலும், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வை 709 பேர் எழுதினர். 61 பேர் எழுதவில்லை. இதில், இயற்பியல், பொருளாதார பாடங்களுக்கான தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில், தேர்வு மையங்களில் சோப்பு, கிருமி நாசினிகள் வைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவி கொண்டு சென்று தேர்வு எழுதினர். இதே போல், தேர்வு எழுதி முடிந்து வந்த பின்பும் கைகளை கழுவினர்.

Tags :
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்