×

கொரோனா குறித்து வரும் உண்மைக்கு மாறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் வட்டார மருத்துவ அலுவலர் பேச்சு

கீழக்கரை, மார்ச் 19: ஏர்வாடி தர்ஹாவில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து ஓட்டல் மற்றும் விடுதி உரிமையானர்களை அழைத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாயல்குடி வட்டார மருத்துவ அலுவலர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ். துணைத் தலைவர் உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அஜ்மல் கான் வரவேற்றார்.
கூட்டத்தில் ஏர்வாடியில் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் விளக்கி பேசினர். கலந்து கொண்ட அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் யாசர் அரபாத் பேசியதாவது:- வாட்ஸ்-அப்பில் ெகாரோனா பற்றி வரும் உண்மைக்கு மாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இறப்பு சதவீதம் கொரோனா நோயால் குறைந்திருந்தாலும் பரவும் தன்மை அதிகரித்துள்ளது. இதனுடைய தாக்கம் அச்சமடையும் நிலையில் இல்லை. ஏர்வாடியில் வெளி மாநிலங்களை சேர்ந்த யாத்திரீகர்கள் அதிகமாக வந்து செல்ல க்கூடிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஏர்வாடி நுழைவு வாயில் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு தர்கா செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. நோய் தாக்கம் கண்டறியப்பட்டால் அழைத்துச் செல்ல தயார் நிலையில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு தரப்பில் முழு நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அரசு தெரிவிக்கும் முறைகளை பின்பற்றினால் இந்த நோயை விரட்டியடித்து விட முடியும். குறிப்பாக ஏர்வாடியில் உள்ள 52க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் வாசலில் தண்ணீர் மற்றும் சோப் வைக்க வேண்டும். கை கழுவிய பின்னர் யாத்திரீகர்கள் விடுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த விதிமுறையை விடுதி உரிமையாளர்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இது குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு இதை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்க ேவண்டும்.

கடந்த காலங்களில் ராமேஸ்வரம். ஏர்வாடி. கீழக்கரை போன்ற கடலோர கிராமங்களில் மலேரியா அதிகமாக காணப்பட்டது. அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மலேரியா பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல்களிலும் கிருமி நாசினி கொண்டு துடைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம் ஜெய்சன், இளநிலை பூச்சியியல் வல்லுனர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், ஊராட்சி சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உட்பட ஓட்டல், விடுதி உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : anyone ,Medical Officer ,Corona Regional ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த...