×

ரமேஸ்வரம் முதல் திருப்பதிக்கு காரைக்குடி வழியாக ரயில் இயக்க கோரிக்கை

காரைக்குடி, மார்ச் 19: ராமேஸ்வரம் முதல் திருப்பதி வரை காரைக்குடி வழியாக சென்னைக்கு செல்லாமல் குறைந்த தூரமாக புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் வணிகக்கழகம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், ‘ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து குறைந்த தூரத்தில் ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் இயக்கப்பட வேண்டும்.

திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, அரக்கோணம், காட்பாடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மானாமதுரை வழியில் புதிய ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில் தூரம் குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் செல்ல வாய்ப்புள்ளது. அதேபோல் கொல்கத்தாவிலிருந்து ஹவுரா திருச்சி வாரந்திர விரைவு ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.
திருவாரூர்-காரைக்குடி பாசஞ்சர் ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Tirupati ,Karaikudi ,Rameshwaram ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!