×

தொழிலாளர் துறையில் இணை ஆணையராக பதவி உயர்வு

மதுரை, மார்ச் 19: மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையராக பணிபுரிந்து வந்த பெ.வேல் முருகன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, மதுரை தொழிலாளர் துறை துணை ஆணையராக பணிபுரிந்து வந்த பெ.சுப்பிரமணியன், பதவி உயர்வு பெற்று, இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்திற்கு தொழிலாளர் இணை ஆணையராக பணியாற்றுவார்.

Tags : Associate Commissioner of Labor ,
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு