×

ரயில் பயணிகளை காக்க கூடுதல் கவனம் தேவை

மதுரை, மார்ச் 19: கொரோனா வைரஸ் பரவலாக்கத்தை தடுக்க கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி. கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலாக்கத்தை தடுக்க, பயணிகளுடன் ரயில் நிலையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நடைமேடை கட்டணத்தை ரூ.10லிருந்து 50 ஆக உயர்த்தி சென்னை மற்றும் மதுரை கோட்ட மேலாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கொரோனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் கடமை.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதற்கு கட்டண உயர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவது நேர்மையான செயல் அல்ல. கொரோனா வைரஸ் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி தருவது நிறுத்தப்பட்டுள்ளது. தூய்மை மற்றும் பாதுகாப்பான பொருட்களை கொடுக்க முடியாமல் பயணிகளுக்கு தாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய பணியை ஒரேநாளில் கைவிடுவீர்கள். ஆனால், பயணிகளோ கொரோனா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொறுப்புணர்வுக்காக ஐந்து மடங்கு கட்டணத்தை உடனே தரவேண்டும் என்று உத்தரவிடுவீர்களா? இது கடும் கண்டனத்துக்குரியது. எனவே இக்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags : train passengers ,
× RELATED வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில்...