×

விதிமுறையை மீறி இயங்கிய 3 கிரஷர் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம், மார்ச் 19: சேலம் அருகே விதிமுறையை மீறி இயங்கி வந்த 3 கிரஷர் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குள்ளமநாயக்கன்பட்டியில் விதிமுறையை மீறி, கிரஷர் தொழிற்சாலைகள் இயக்கி வருவதாக  புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 3 கிரஷர் தொழிற்சாலைகள் மாசுகட்டுபாடு வாரியத்தின் நிபனைகளை மீறி செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பான அறிக்கை சென்னை தலைமை மாசுகட்டுபாடு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அந்த 3 கிரஷர் தொழிற்சாலைகளை மூடவும், மின் இணைப்பை துண்டிப்பிற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, விதிமுறையை மீறி இயங்கி வந்த 3 கிரஷர் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘விதிமுறையை மீறி இயங்கி வந்த 3 கிரஷர் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த ஆலைகளை மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறையை மீறி செயல்படும் கிரஷர் தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Tags : Crusher Factories ,
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்