×

பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

பள்ளிபாளையம், மார்ச்19: பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை 5 மணிக்கு பேருந்து நிலையம் சென்று, ஈரோட்டில் இருந்து வந்த  அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து அடித்தனர். நகராட்சி  ஆணையாளர் இளவரசன், துப்புறவு ஆய்வாளர் நகுல்சாமி ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர். நகராட்சி பகுதியில் அடுத்த இரு வாரங்களுக்கு சந்தைகள்  நடைபெறாது என நகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல், பள்ளிபாளையம் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்யா தலைமையில்  நடந்தது. இதில் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

குமாரபாளையம் உழவர் சந்தையில், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, சுகாதார அதிகாரி ராமமூர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கொரோனா வைரஸ்  தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். அங்கு விவசாயிகள், பொதுமக்களுக்கு கொரோனா பரவும் விதம் குறித்தும்,  இஞ்சி, பூண்டு, சீரகம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும், வெளியே சென்று வரும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். சளி, இருமல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags : Municipalities ,
× RELATED மதுரை-மானாமதுரை இடையே ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்