×

ஓசூரில் கூண்டில் அடைத்து விற்கப்பட்ட 40 கிளிகள் பறிமுதல்

ஓசூர், மார்ச் 19:ஓசூர் வைஷ்ணவிநகர் பகுதியில் கூண்டுகளில் கிளிகளை அடைத்து விற்பனை செய்து வருவதாக பிராணிகள் வதைதடுப்பு சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இரண்டு பெண்கள் ஒரு ஜோடி கிளிகள் 500 என பொதுமக்களிடம் கிளிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓசூர் வனத்துறையினருக்கு பிராணிகள் வதைதடுப்பு சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், கூண்டுகளில் அடைக்கப்பட்ட இறக்கைகள் பறிக்கப்பட்ட 40 கிளிகளையும் பறிமுதல் செய்து, அந்த பெண்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் ஈரோடு பகுதியிலிருந்து கிளிகளை பிடித்து வந்து ஓசூர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 40 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு