×

மின்வாரிய அலுவலகம் வரவேண்டாம் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவித்தால் போதும்

ஓசூர், மார்ச் 19:கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மின் சம்பந்தமான குறைகள் செல்போன், வாட்ஸ் அப்பில் தெரிவித்து, மின்வாரிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக செல்போன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும், கடிதம் வாயிலாகவும் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மேலான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி, செயற்பொறியாளர்: 94458-55458, உதவி செயற்பொறியாளர்கள் ஓசூர் நகரம்: 94458-55459, பாகலூர்: 94458-55468, சிப்காட்: 94458-55473, தேன்கனிக்கோட்டை 94458-55479, ஓசூர்: 94458-55485 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்