×

விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ(20), இவரது நண்பர்களான செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம்(19), இலக்கியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன்(19) ஆகியோர் தொப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி மாலை கல்லூரி முடிந்து, டூவீலரில் தொப்பூரில் இருந்து தர்மபுரி வந்து கொண்டிருந்தனர். அப்போது, நல்லம்பள்ளியை அடுத்த கெங்கலாபுரம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, எதிரே சடையன்கொட்டாய் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த செல்வன்(35), பூங்கொடி(33) தம்பதியினர் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதினர். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த சின்னம்பள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தமிழரசன் வந்த டூவீலர் அவர்கள் மீது மோதியது. இதில், டூவீலர்களில் வந்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கட்டிட மேஸ்திரி தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : accident ,
× RELATED சேரன்மகாதேவியில் சிதிலமடைந்த குறுகிய...