×

குப்பையை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு

தர்மபுரி, மார்ச் 19: பொதுமக்களிடம் மக்கும், மக்கா குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தரம் பிரித்து வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்காததால் முடங்கி கிடந்த இத்திட்டம், கடந்தாண்டு முதல் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை உரமாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மக்கும், மக்கா குப்பைகளை தரம்பிரித்து வாங்க, ஒவ்வொரு ஊராட்சியிலும் 150 வீடுகளுக்கு ஒரு காவலர் வீதம் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் பல ஊராட்சிகளில் மக்கும் மக்கா குப்பைகள் தரம்பிரித்து வாங்காமல், உரமாக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. தூய்மை இந்தியாவை உருவாக்குவதில், தூய்மை காவலர்கள் முக்கிய காரணியாக இருக்க வேண்டும். வீடுகளில் குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகளை தனிதனியாக தரம் பிரித்து வாங்க வேண்டும். அவ்வாறு தராத பொதுமக்களிடம்  மக்கும், மக்கா குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துளள்னர்.

Tags :
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...