திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

திருச்சி, மார்ச் 18: கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காரணமாக ரயில்வே போலீசார் முகமூடி அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>