×

திருச்சி பெரிய கடைவீதியில் 15 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி, மார்ச் 18: திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் ஆகிய போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் கடையில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ குட்கா, பான்பராக் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் அப்துல்முத்தலிப்(54) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : kutka ,road ,Trichy ,
× RELATED குட்கா கடத்திய இருவர் சிக்கினர்