×

துப்புரவு தொழிலாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து மாநகராட்சியில் சிஐடியூ காத்திருப்பு போராட்டம்

திருச்சி, மார்ச் 18: துப்புரவு தொழிலாளர்களின் பணி நீக்கத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜன.8ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் அரியமங்கலம் மற்றும் ரங்கம் கோட்டத்தை சோந்த 20 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் 20 பேரையும் மாநகராட்சி உதவி ஆணையர் வேலையை விட்டு நீக்கினார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்.3ம் தேதி உதவி கலெக்டர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் வேலை வழங்க பரிசீலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இது வரையில் தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து சிஐடியூ தொழிற்சங்கள் சார்பில் திருச்சி மாநகராட்சி முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை மாநில சம்மேளன பொதுச்செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ரங்கராஜன், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ராமர் உள்பட ஏராளமானவர்கள் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை போலீசார் மாநகராட்சி வளாகத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதன் பின்னர் தொழிற்சங்கத்தினர் கேட்டைத் தள்ளிக்கொண்டு மாநராட்சி வளாகத்துக்குள் சென்றனர்.

பின்பு அங்கு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலிடத்து உத்தரவின் பேரில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பணிகள் பறிக்கப்பட்டது. மறு உத்தரவு வந்தால் மட்டுமே வேலையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Tags : CITU ,protest ,corporation ,cleaning workers ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...