×

திருத்துறைப்பூண்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரி ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 18: திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு ஸ்பிரே செய்யும் பணி நடைபெற்றது. அதேபோல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருவதையும் உதவி கலெக்டர் கமல்கிஷோர் ஆய்வு மேற்கொண்டு தேவையான சுகாதார நடவடிக்கைகளை தொய்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் ஒன்றிய அலுவக வாசலில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டு ஒரு மேஜையில் சோப்பு மற்றும் கிரிமிநாசி கொண்டு அலுவலகம் உள்ளே வருபவர்கள் கைகளை முழுமையாக சுத்தம் செய்தபின் உள்ளே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள், சுப்பிரமணியன், தமிழச்செல்வன், மேலாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

Tags : Corona ,Tirupati ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...