×

கொரோனா வைரஸ் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு வாசக போட்டி

மன்னார்குடி, மார்ச் 18: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோட்டூர் வட்டாரக் கிளையின் தலைவர் தங்கபாபு, செயலாளர் பாரதி, பொருளாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரானோ வைரஸ். ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்டுப்படுத்தும் பணிகளில் இருந்தாலும், உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு முனைப்போடு எடுத்து வருகிறது. பிள்ளைகளோடு எப்போதும் இருக்கிற ஆசிரியர்களாகிய நாம் கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை நாள்தோறும் பள்ளியில் மாணவர்களிடம் விதைத்து இருக்கிறோம்.

தன் சுத்தம், சுய கட்டுப்பாடு, கூட்டங்களை தவிர்த்தல், தடுப்பு முறைகள், பண்டைய தமிழர் உணவு முறை இவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் உங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் 10 விழிப்புணர்வு வாசகங்களை எழுதிய ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் மற்றும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஈவேரா ஆகியோரால் பரிசுகள் வழங்கப்படும்.

Tags : Awareness Competition ,School Teachers ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா