×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக “வரி முடக்கம் இயக்கம்” துவக்கம் 65 ஊர் ஜமாத் கூட்டத்தில் முடிவு

முத்துப்பேட்டை, மார்ச் 18: முத்துப்பேட்டை உட்பட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட சுற்று பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திருந்த சட்டத்திற்கு எதிராக அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு என உருவாக்கி கடந்த ஒரு மாதகாலமாக தொடர் காதிருப்பு போராட்டத்தையும் தனியாக நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 65 ஊர் ஜமாத்துகள் ஒருங்கினைந்த கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பின் செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோர் விளக்கி பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

65 ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று என்பிஆரில் உள்ள கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முதல் கட்டமாக 65 ஊர்களிலும் வரும் 25ம்தேதிக்குள் “வரி முடக்கம் இயக்கம்” துவங்கி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தவித்து அரசுக்கு வரி கிடைக்க கூடிய ஆடம்பர பொருட்கள், கட்டுமான பொருட்கள் உட்பட எந்த பொருட்களையும் வாங்க கூடாது, வரும் ரமலான் நோன்புக்கு தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகமும் வாங்குவதை புறக்கணிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும் 65 ஊர்களின் ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Launch ,
× RELATED வழிபாட்டு தலங்களை திறக்கலாம் மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடு தளர்வு