×

கொரோனா வைரஸ் எதிரொலியால் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கும்பகோணம், மார்ச் 18: கொரோனா வைரஸ் எதிரொலியால் கும்பகோணத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழக எஸ்சி- எஸ்டி தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக எஸ்சி- எஸ்டி தொழிலாளர்கள் தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று போலீசார் கேட்டு கொண்டனர்.

இதனால் தேதி குறிப்பிடாமல் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில பொது செயலாளர் தி்ல்லைநாதன், மாநில தலைவர் தண்டபாணி, நீலப்புலிகள் கட்சி தலைவர் புரட்சிமணி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில்,தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று தொழிலாளர்கள் பணிக்கு வந்தால் பணிகள் தருவதில்லை. ஆப்சென்ட் போடுவது, ஊதிய ஊயர்வை தள்ளி வைப்பது போன்ற செயல்களில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து கழகம் யாருக்கும் பயனில்லாத கழகமாக மாறிவிட்டது. எனவே தமிழக அரசு இந்த கழகத்தை அரசு நிறுவனமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று தொழிலாளர்கள் பணிக்கு வந்தால் பணிகள் தருவதில்லை. ஆப்சென்ட் போடுவது, ஊதிய ஊயர்வை தள்ளி வைப்பது போன்ற செயல்களில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து கழகம் யாருக்கும் பயனில்லாத கழகமாக மாறிவிட்டது.

Tags : Demonstration ,state transport workers ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்