×

கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு

கந்தர்வகோட்டை, மார்ச் 18: கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாநிலத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இணைந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு தகவல் அனுப்பும் பொருட்டு ஆய்வுக்கு வந்திருந்தனர். வருகை தந்த சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாநில ஒருங்கிணைப்பாளா; பாலமுருகன், பள்ளி மேலாண்மைக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட அனைவரையும் தலைமையாசிரியர் செந்தில்முருகன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாத்துரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு மற்றும் பெற்றோர்கள் திட்ட குழுவினருக்கு ஆய்வுக்கு துணை புரிந்தனர். கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் செயல்பாடுகளையும், மாணவர்கள் இணையத்தின் வழியாக நாட்டமறித்தேர்வு எப்படி எழுதுகிறார்கள் என்பதையும் படம் பிடித்தனர். பள்ளியில் செயல்பட்டு கொண்டிருக்கக் கூடிய இளைஞர் மற்றும் சுற்றுசூழல் சார் மன்றத்தின் சார்பில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைப்பெற்றது.

பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம் அமைத்திருப்பது, பராமரிப்பது, பள்ளிக்கு சுற்றுசுவர் எழுப்புதல், பள்ளி வளாக தூய்மை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்தல், நோய் தடுப்பு நிகழ்வாக மாணவர்கள் தினமும் பள்ளியில் சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் ஆகிய நிகழ்வுகளை பாராட்டினர்.
நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் முனியய்யா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : Gomapuram Government High School ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு