×

பெற்றோர் கவலை கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விழிப்புணர்வு பிரசுரம்

கந்தர்வகோட்டை, மார்ச் 18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை கொரோனா வைரஸ் தாக்காத ஒன்றியமாக்க ஒன்றியம் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க முன்னோட்டமாக கந்தர்வகோட்டையில் பொதுமக்களிடம் வழங்கி ஒன்றியக் குழு தலைவர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் எவ்வாறு உருவாகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, அவற்றை எவ்வாறு போக்குவது என்பது குறித்து விளக்கமாக துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, அவற்றை கந்தர்வகோட்டை நகர் பகுதிகளில் அரசு மருத்துமனை, கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், குமரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், அரவம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருண்பிரசாத், வடிவேல்குமார், சுகாதார ஆய்வாளர் மேற்பார்வை பொறுப்பு முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் நல்லமுத்து, திருநாவுகரசு மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் 36 ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் கொடுக்கப்படவுள்ளது.

Tags : Kandarwakota Union ,
× RELATED உலகையே அதிரவைக்கும் கொரோனா...