×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி பள்ளிகள் விடுமுறையால் மதிப்பெண் குறையும் அவலம்

அறந்தாங்கி, மார்ச் 18: பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்கள் பொதுத் தேர்வில் பெறும் மார்க் குறையும் என்பதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களை பல லட்ச ரூபாய் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பது அவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மார்க் பெற வேண்டும் என்பதற்காகத் தான். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர் எடுக்கும் மார்க்தான் அவர்கள் மேல்படிப்பு படிக்கக் கூடிய பாடப்பிரிவையும், கல்லூரியும் தேர்வு செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். அந்த அளவிற்கு அரசு பொதுத்தேர்வுகளாக எஸ்எஸ்எல்சி மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க்குகள் மாணவ,மாணவியருக்கு மிக முக்கியமானதாகும்.

தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியின் தரத்தை வெளிக்காட்டுவதற்கும், அதிக மாணவ,மாணவியர் அந்த பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் பெறும் மார்க்குகள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 12 ஆம் வகுப்பு மார்க்குகளை மாணவர்கள் பெறுவதற்கு ஒவ்வொரு தனியார் பள்ளியும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் விரைவில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வும் தொடங்க உள்ளது.இதற்காக தனியார் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு வரும் 31ந் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டது. அதனால் கல்லுhரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மாணவ,மாணவியருக்கு பரவிpவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், அரசு பொதுத் தேர்வை எழுதி வரும், எழுத உள்ள மாணவ மாணவியர் வீடுகளில் முறையாக படிப்பதில்லை. ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்றால் நன்றாக படிக்கும் சூழல் இருக்கும்.இந்த நிலையில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ,மாணவியர் பள்ளிகள் விடுமுறையால் ஆசிரியர்களிடம் சந்தேகம் கூட கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து பல தொந்தரவுகளையும் தாங்கிக்கொண்டு படித்தாலும், மாணவ மாணவியருக்கு மார்க்கு குறைந்து விடும் அபாயம் உள்ளது

எல்.கே..ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளை செலவு செய்து படிக்க வைத்து வரும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசு பொதுத் தேர்வில் தங்கள் குழந்தைகள் மார்க் குறைவாகத்தான் எடுக்க முடியும் என்ற சூழலால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : school vacations ,
× RELATED கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால்...