×

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூன் தமிழிலும் ஒலிபரப்பு

அறந்தாங்கி, மார்ச் 18: தினகரன் செய்தி எதிரொலியாக கொரொனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய சுகாதாரத்துறை மூலம் மொபைல்போன்களில் காலர் டியூன்கள் மத்திய அரசின் ஏற்பாட்டில் தானாகவே செட்டிங் செய்யப்பட்டுள்ள நிலையில்,தற்போது தமிழிலிலும் காலர் டியூன்களில் விழிப்புணர்வு பதிவு ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. சீனாவில் கொரானோ வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரானோ வைரஸ் தாக்குதலால் கத்தார் நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு அந்த நாடு தடைவிதித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் பாதிப்பு விரிவடைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரானோ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைப்போலவே தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், அந்த வைரஸ் எப்படி பரவும், வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்வது என்பது போன்று ஒரு ஆடியோ பதிவை செய்து, அனைவரின் மொபைல் போன் காலர் டியூனாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் செய்துள்ளது. நாம் நமது போனில் இருந்து அடுத்தவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டால், நாம் கால் செய்தவரின் மொபைல் போனில் ரிங் டோன் வருவதற்கு பதிலாக லொக் லொக் என ஒருவர் இருமும் சப்தத்துடன், ஆங்கிலத்தில் ஒரு ஆனின் பதிவு செய்யப்பட்ட விழிப்புணர்வு வசனம் இடம் பெற்றது.

புதிதாக போன் செய்பவர்கள் இந்த இருமல் சத்தத்தை கேட்டு முதலில் அதிர்ச்சி அடையும் வகையில் இந்த காலர் டியூன் செட்டிங் செய்யப்பட்டுள்ளது. கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க நன்றாக சோப்பு (கிருமிநாசினி)போட்டு கைகழுவுதல் அவசியம் எனவும், இருமுபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட துhரத்திற்கு தள்ளி நிற்க வேண்டும் எனவும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் பேசினால், தமிழக மக்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறிய புகாரின்பேரில் தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக தற்போது தமிழ் மொழியிலும் கொரோனா விழிப்புணர்வு வாசங்கள் மொபைல் போன்களில் ஒலிபரப்பாகி வருகின்றன. தமிழில் வெளியாகும் இந்த விழிப்புணர்வு வாசகத்தை கேட்கும் பொதுமக்கள் அந்த கருத்தின்படி நடந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. கொரோனா வைரஸ் குறித்த காலர் டியூன் தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக தற்போது தமிழிலும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பராவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Caller Tune Broadcast ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை