×

கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரம்

பொன்னமராவதி, மார்ச் 18:  பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரின் அறிவுரையின்படியும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு கூட்ட அறிவுரைகளின்படியும் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் செயல்அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல் இருமல், உடல் சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்த கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும்.

இந்நோய் பரவும் விதம் நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருதும் போதும் , தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக 20 சதவீதம் பரவுகிறது. இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன அவ்வாறு கிருமிகள் ஒட்டியுள்ள கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தைத் தொடும்போது இந்நோய் தொற்று 80 சதவீதம் ஏற்படுகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும், ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும் போது தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். 3 வயது குழந்தைகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகும், திருமண நிகழ்வுகள், கடைகளுக்கு சென்று திரும்பிய பிறகும் ஒவ்வொருமுறையும் வெளியில் சென்று வீடு திரும்பும் போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேலும், பேரூராட்சிப்பகுதியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், பயணிகள் நிழற்குடை, ஆட்டோ, கார், அரசு அலுவலகங்கள், பேருந்துநிலையம், சந்தை போன்ற பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு வார்டுகள் தோறும் துண்டுப்பிரசுரம் , இப்பேரூராட்சி பணியாளர்கள் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமணைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும் எனவும் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுமாய் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இலுப்பூர் இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் கொரோனோ வைரஸ் தடுக்கும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களுக்கு தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இலுப்பூர் பேரூராட்சி பணியாளர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள், பொதுமக்கள் பயன்படுத்தும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களுக்கும், கார் ஸ்டாண்டில் உள்ள கார் மற்றும் வேன்களுக்கும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள் ஸ்பிரே செய்யப்பட்டது. மேலும் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ