×

சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, மார்ச் 18: சிவாச்சாரியர்கள் சிறப்பு வேள்வி நடத்தினர். அதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாராம், பாஜக மாவட்டத் தலைவர் சேதுபதி, பொதுச்செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. கருப்புக்குடிப்பட்டி தமிழாசிரியர் முருகேசன் ஆன்மீக சொற்பொறிவாற்றினார்.

Tags : Teobai Ashtami ,worship ,Cholaiswarar Temple ,
× RELATED சிவாலயங்களில் சங்கு பூஜை