×

வேலூர் மாவட்டத்தில் தடையை மீறி மாடுவிடும் விழா நடத்தினால் குற்ற நடவடிக்கை பாயும் கலெக்டர் எச்சரிக்கை

வேலூர், மார்ச் 18: தடை மீறி மாடு விடும் விழா நடத்தினால் குற்ற நடவடிக்கை பாயும் என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளர். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றி பெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்தியாவில் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாவின்போது, பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் 17ம் தேதி (நேற்று) முதல் மாடு விடும் விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது. 17ம்தேதி குடியாத்தம் அலங்காநல்லூர்மோட்டூர், 18ம்தேதி அணைக்கட்டு கன்னிகாபுரம், 19ம்தேதி கே.வி.குப்பம் வேப்பங்கனேரி, 20ம்தேதி குடியாத்தம் எர்த்தாங்கல், 21ம் தேதி கே.வி குப்பம் வடுகந்தாங்கல் இபி காலனி, 23ம் தேதி அணைக்கட்டு தார்வழி, 24ம் தேதி அணைக்கட்டு கெங்கநல்லூர் மதுரா சீலேரி, 25ம் தேதி கே.வி குப்பம் சின்ன அரும்பாக்கம், 26ம் தேதி வேலூர் வேப்பம்பட்டு, 26ம் தேதி காட்பாடி வசந்தபுரம், 27ம் தேதி அணைக்கட்டு இறைவன்காடு, 28ம் தேதி காட்பாடி அக்ராவரம்- தாராபடவேடு, 30ம் தேதி குடியாத்தம் அக்ராவரம், ஏப்ரல் 6ம் தேதி காட்பாடி வஞ்சூர் ஆகிய இடங்களில் நடைபெற இருந்த மாடு விடும் விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது.

புதிதாக மாடு விடும் விழா நடத்த அனுமதி கோரி ஆன்லைன் மூலம் வரப்பெற்ற மனுக்களும், ஏற்கனவே அரசாணை பெற வேண்டி அரசுக்கு அனுப்பியவை நிராகரிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இதனை மீறி எருதுவிடும் விழா நடத்தப்பட்டால் விழா குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் உலகளாவிய நோய் தொற்றாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும், புதிதாக எருது விடும் விழா நடத்துவதற்கு அளிக்கப்படும் எந்த ஒரு மனுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,Vellore district ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...