×

கொரோனா எதிரொலியால் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

வேலூர், மார்ச்.18: கொரோனா எதிரொலியால் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 10ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை செயல்முறை தேர்வுகள் உட்பட திட்டமிட்டபடி நடைபெறும். இந்த தேர்வுகள் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் உறைவிடபள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, சுகாதாரமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமிநாசினி சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்குரிய தேர்வுப் பணிகள் மற்றும் 2020-2021ஆம் ஆண்டிற்குரிய அட்டவணை தயாரிப்பு, திட்ட அறிக்கை, ஆப் மூலம் கீயூஆர் கோர்டில் உள்ள பாட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்குரிய விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சேகரித்து வைத்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குரிய மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகள் போன்ற பணிகளை பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான அறிவுரைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : teachers ,holidays ,Corona ,School Director ,
× RELATED அபராத தொகை கட்டுவதை ரத்துசெய்யக்கோரி...