×

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு பளிங்காநத்தத்தில் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் இய ங்கி வரும் இயற்கைப் பேரி டர் மீட்புப் பணிகள் பிரிவு அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா தொற்றுப் பரவல்தடுப்புக்கான கட் டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. இதற்கு வரும் புகார்களை கொண் டு டாக்டர் தலைமையிலா ன மருத்துவக் குழுவினர் புகார் வந்த இடத்திற்கு நே ரில் சென்று களப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமி டப்பட்டுள்ளது.
அரியலூர், மார்ச் 18: திருமானூர் ஒன்றியம் பளிங்காநத்தம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்க விழா நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். வாகன சேவையை அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள்தோறும் முகாம்கள் நடத்தியும், விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு கால்நடை நலன் பாதுகாக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இயலாத பட்சத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் இலவச அழைப்பு எண்ணான 1962க்கு அழைத்தால் கால்நடை வளர்ப்போரின் இல்லங்களுக்கே நேரடியாக வந்து இலவசமாக சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேல்சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கு வேறு மாவட்டங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் சுதா, ஆனந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பாலாஜி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீதுஅலி, ஊராட்சி தலைவர் சாமிநாதன், வட்டாட்சியர் கதிரவன் பங்கேற்றனர்.

Tags : Veterinary Medical Services ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி