×

சாலை விரிவாக்கத்திற்காக 100 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டும் பணி

சீர்காழி, மார்ச் 18: சாலை விரிவாக்குத்திற்காக 100 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக சாலைகளின் இருபுறங்களில் உள்ள 100 ஆண்டுகள் கடந்து நிற்கும், பல்வேறு மரங்கள் வெட்டப்படுகின்றன. நிழல் தரும் இந்த மரங்கள் குரங்கு விளங்குகள் பறவைகளின் வாழ்விடமாக இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிக்காக சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் குரங்குகளின் வசிப்பிடமாக இருந்த 25க்கும் மேற்பட்ட புளிய மரங்கங்கள் வெட்டபட்டன.

இதனால் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருப்பிடம் இன்றி தவித்து அங்கும் இங்கும் ஓடி வருகின்றன. தினந்தோறும் அந்த பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு அந்த வழியாக செல்லும் பக்தர்கள் விவசாயிகள், உணவு பொருட்களை வழங்கி செல்வார்கள். மரங்கள் வெட்டப்பட்டதால் குரங்குகள் இருப்பிடம் இல்லாமல் சிதறி ஓடி விட்டன. இதனால் உணவு வழங்க வந்தவர்கள் குரங்குகள் இல்லாததால் தவித்தனர். மரங்கள் அந்த பகுதியில் அடர்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நிழலில் இளைப்பாறி செல்வார்கள். மரம் வெட்டுவது குறித்து தகவலறிந்து வந்த. நிலம்,நீர் அமைப்பை சார்ந்த விவசாயிகள் மரம் வெட்டும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

தேசியநெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பாக நீதிமன்றத்தின் தடை உள்ள நிலையில் தடையை மீறி மரங்களை வெட்டக்கூடாது என கூறி மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதை விவசாயிகள் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED அடுத்த வாரம் வருகிறது 100 வென்டிலேட்டர்